tamilnadu

img

தொலைநிலைப் படிப்புகளுக்கு செப்.27 முதல் தேர்வுகள் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உள்பட) தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள்(யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த படிப்புகளுக்கு 2021-ஆம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன. மேலும், இதற்கான தேர்வுக்கால அட்டவணையும் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்டம்பர் 20-ஆம் தேதி அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளார்.

;