tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளருக்கான சட்டத்தை அமல்படுத்திடுக!

சென்னை:
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்துவந்தனர். கொரோனா பொதுமுடக்கம் வந்தபோது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியில்லாமல் பட்டினியோடு தங்கள் சொந்த மாநிலத்திற்கும் செல்லமுடியாமல் சொல்லமுடியாத அல்லலுக்கு ஆளாகினர். சிஐடியு தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவினார்கள்.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்திலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வழக்கில் தீர்ப்பு வழங்கியதன் மூலம் சில நடவடிக்கைகளை அரசு எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது.புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பந்தமாக கடந்த ஜுன் 1 அன்று தமிழ்நாடு சிஐடியு தரப்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் எவ்வளவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் என்ற விபரம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தெரியவில்லை. காரணம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டத்தின் கீழ் எந்த தொழிலாளியும் பதிவு செய்யப்படவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஐடியு முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு: 
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு எல் அண்ட் டி துறைமுகம், கல்பாக்கம் அணுமின்நிலையம் என்எல்சி, கூடங்குளம் அணுமின்நிலையம்,  வடசென்னை அனல் மின்நிலைய கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளில், கட்டுமானங்களில் வேலைசெய்கின்றவர்களை அரசு பொதுமுடக்கம் அறிவித்த பின்னர் அவர்களுக்கான ஊதியம் வழங்குவது, தங்குமிடம் ஏற்பாடு, அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு உண்டான பயணக்கட்டணம் விடுப்புடன் அளிப்பது உட்பட அனைத்து சலுகைகளையும் நிர்வாகங்கள் வழங்கியிருக்க வேண்டும். தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்லும் பொழுது வேலையைவிட்டு செல்வதாக இருந்தால் அந்த தொழிலாளிக்குண்டான ஊதியம், போனஸ், பணிக்கொடை மற்றும் அவருக்குண்டான சட்டரீதியாக உள்ள தொகைகளை அளித்து அனுப்பி யிருக்கவேண்டும். நிர்வாகங்கள்இந்த நடவடிக்கைகளைச் செய்யாத காரணத்தினால் தொழிலாளர்கள் கடுமையான அல்லலுக்கு ஆளாகினர்.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வரும்பொழுது5 தொழிலாளர்கள் இருந்தாலே பதிவு செய்து அத்தொழிலாளிக்கு உண்டான ஊதியத்துடன் விடுப்பு,தங்குமிடம், பாஸ்போர்ட் வழங்கியிருக்க வேண்டும். மீண்டும் பணிக்கு வர விருப்பம் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்துடன் விடுப்புடன் அளித்து பயணக்கட்டணம் உட்பட நிர்வாகங்கள் அளித்திட வேண்டும் என்ற மாநிலங்களுக்கு இடையேயான  இடம் பெயருதல்சட்டம் 1979ஐ அமல்படுத்திடவேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் என்று பதியாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று பதிவு செய்யும் ஏற்பாடு உள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் வராமல் அவர்களுக்கு உண்டான சட்டப்படியான சலுகைகள்மறுக்கப்படும் நிலை ஏற்படும். ஆகவே புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்டத்தை கறாராக அமல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை ஜுன் 15 அன்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சு.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நடைபெற்றது. சிஐடியு தரப்பில்அஜாய்கோஷ் ஆஜரானார். அரசு தரப்பு  வழக்குரைஞர் வாதிடும்பொழுது எல்அண்ட்டி நிர்வாகத்தை விசாரித்ததில் அனைத்து சட்டப்பூர்வ சலுகைகளையும் அளித்துவிட்டதாக அந்த நிர்வாகம் தெரிவிப்பதால் அவர்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று கூறினார். இதனையடுத்து வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

;