tamilnadu

img

சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துக!

சென்னை, ஜூன் 24 - சாதிய துவேஷத்தின் காரண மாக நடைபெறும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரி லேயே தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலி னுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் 22.06.2024  அன்று கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தின் பெருமைமிகு  சாதிமறுப்பு பாரம்பரியம்

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்!

“பிறப்பொக்கும் எல்லா     உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்” 

- என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் இயம்பிய சாதி மறுப்புப் பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு.

இத்தகைய நமது தமிழ்நாட்டில் சாதிய துவேசத்தின் காரணமாக சாதி ஆணவப்படுகொலைகள்  தொடர்ச்சியாக நடைபெற்று வரு வது கவலையளிக்கிறது. இதனைத் தடுத்து நிறுத் திட அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலாருக்கும் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெ டுக்க இருக்கிற சட்டப் பூர்வமான உரிமை இங்கே சாதி யின் பெயரால்  பறிக்கப்படுகிறது.

கொலை செய்யப்படும்  சாதி மறுப்பு தம்பதியர்

உலகம் முழுவதும் பெண் சமூ கம் எதிர்கொள்கிற சவால்களை விட, இந்தியச் சமூகம் ‘சாதி’ என்கிற கூடுதல் சுமையை பெண்கள் மீது சுமத்தியிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணங்கள், இந்நாட்டின் சாதிய முறைமைக்கும் ஆணாதிக்கத்திற் கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாகவே சுயதேர் வின் அடிப்படையில் வாழ்க்கை  இணையைத் தேர்வு செய்து கொள்கிற இளம் தம்பதியர்கள் தமிழ் நாட்டிலும், நாடு முழுவதிலும்  கொடூரமாகக் கொல்லப்படுகின்ற னர்.

சாதிய அமைப்புகள் பல்வேறு வகையான தண்டனை களை வழங்கி, அச்சத்தை உருவாக்கி சுய தேர்வு திருமணங்களை தடுத்து நிறுத்த விழைகின்றனர்; பழக்க வழக்கம், சம்பிர தாயம், மரபு என்பவைக ளால் நியாயப்படுத்துகி ன்றனர்.  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை களான வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், தன் உடலின் மீதான உரிமை, யாருடன் வாழ வேண்டும் என்கிற உரிமை ஆகியவற்றை இச்செயல்கள் மீறுகின்றன.

கௌரவம், சாதித் தூய்மை என்ற பெயரில் கொடூரக் குற்றங்கள்

‘கௌரவம்’, ‘சாதித் தூய்மை’  என்ற பெயரால் நடைபெறும் கொலை மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டம் ஏதும் இந்தியாவிலும், தமிழ்நாட்டி லும் இல்லை. இந்நிலையில் சாதி, மத அமைப்புகள் அல்லது சமூகப் பஞ்சாயத்துகள், சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் கொடூரக் குற்றங்கள் அவற்றில் ஈடுபடும் பஞ்சாயத்துகள் மற்றும் நபர்கள் என ஒட்டுமொத்த குற்றத்தையும் கணக்கில் கொண்டு தண்டனைகள் வழங்கக்கூடிய சட்டம் தேவையாக உள்ளது. இந்திய அரசியல் அமை ப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை களை உறுதிப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்ற ங்களும் இது தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

வழிகாட்டிய பஞ்சாப், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கள்

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ரிட் மனு 26734 / 2014 மீது 23.02.2015 அன்று நீதிபதி கே.கண்ணன் அளித்துள்ள தீர்ப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“பெற்றோர், உறவினர்கள், அதிகாரப்பூர்வமற்ற சமூகப் பஞ் சாயத்துகள் மூலம் தங்களின் உயி ருக்கு அபாயம் இருப்பதாக தம்பதி யர்களிடமிருந்து வருகிற புகார் களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒவ் வொரு காவல் மாவட்டத்திலும் தனிப்பிரிவு இருக்க வேண்டும். தங்களுக்கு அபாயம் உள்ளதெனக் கருதும் பட்சத்தில் வயது வந்த ஒரு வரை பெற்றோரிடம் திருப்பி அனுப்ப காவல்துறை எந்த முயற்சி யையும் எடுக்கக்கூடாது”.

உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து விமலாதேவியின் இணை யர் திலீப்குமார் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், 13.04.2016 அன்று வழங்கியுள்ள தீர்ப்பு  “சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. அத்தகைய தனிச் சட்டம் இயற்றப்படுகிறவரை சாதி மறுப்புத்  திருமண தம்பதிகளைப் பாது காப்பதற்கு சிறந்த வழிகாட்டுதல் களையும் உத்தரவாக வழங்கி யிருக்கிறது.

சாதி மறுப்புத் தம்பதியரைப்  பாதுகாக்க 9 வழிகாட்டுதல்கள்

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரின் புகார்கள்  மீது நடவடிக்கைகள் எடுத்திட தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும். மாவட்டக் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோர் சிறப்புப் பிரி வின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். புகார்களை நேரிலோ, தொலைபேசியிலோ பெறுவதில் துவங்கி, தற்காலிக தங்குமிடத்தில் தங்கவைத்து பாதுகாப்பு வழங்குவது வரை இந்தச் சிறப்புப் பிரிவு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய ஒரு தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும் என்பது உள்பட சாதி மறுப்பு இணையரின் பாது காப்பிற்கு ஒன்பது வழிகாட்டல் களையும் வழங்கி இருக்கிறது.

மேற்கண்ட முக்கியத்துவம்  வாய்ந்த வழிகாட்டல்படி சிறப்பு பிரிவுகளை அன்றைய தமிழ்நாடு அரசு ஏற்படுத்தவில்லை. 

நீதி மன்றங்களை  ஏமாற்றிய அதிமுக அரசு

இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் (வழக்கு எண் 460/2017) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அர சின் அன்றைய உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப் பூர்வமான வாக்குமூலத்தில் “தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் ரிட் மனு 26991/2014ன் படி சிறப்பு பிரிவுகள் தற்பொழுது அமைக்கப்பட்டுவிட்டது” என்றதுடன், சிறப்பு பிரிவுகளின் அதி காரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களையும் தெரிவித்திருந்தார். 

ஆனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக அன்றைய அரசால் பெய ரளவிற்கே இப்பிரிவுகள் அமைக்கப் பட்டன. இச்சிறப்பு பிரிவுகள் செயல் பாட்டிற்கு வரவில்லை. எனவே, தனிச்சிறப்பு சட்டம் இயற்றப்படுகிற வரை நீதிமன்ற உத்தரவின்படி இச்சிறப்பு பிரிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

சிபிஎம் கொண்டு வந்த மசோதாவையும் ஏற்கவில்லை

அதே போல், தமிழ்நாடு அரசு சட்டப் பேரவை விதி எண் 123-இன் கீழ் “கௌர வம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம், கொலை மற்றும் குற்றங் கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அப்போதைய சட்டமன்றக் குழுத் தலைவர் அ. சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் சமர்பித்ததையும் அன்றைய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

அதே போல், தமிழ்நாடு அரசு சட்டப் பேரவை விதி எண் 123-இன் கீழ் “கௌர வம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம், கொலை மற்றும் குற்றங் கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அப்போதைய சட்டமன்றக் குழுத் தலைவர் அ. சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் சமர்பித்ததையும் அன்றைய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண் 123-இன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அப்போதைய சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் சமர்பித்ததையும் அன்றைய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.