tamilnadu

img

டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (என்சிஆர்டிசி) காலியாக உள்ள 19 இணை பொது மேலாளர், உதவி மேலாளர், பொறியியல் இணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
நிர்வாகம் : தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆர்டிசி)
மொத்த காலியிடங்கள் : 19

பணி : Deputy General Manager 
சம்பளம்: மாதம் ரூ.70,000 - ரூ.2,00,000 

Engineering Associate 
Executive
சம்பளம்: மாதம் ரூ.30,000 - ரூ.1,20,000 

Assistant Manager
சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000 மாதம்

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி : துணை பொது மேலாளர் பணிக்கு இளங்கலை, முதுநிலை டிப்ளமோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பொறியியல் துறை சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, 7, 8 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2021

மேலும் விவரங்கள் அறிய https://ncrtc.in/hr-module/HR/uploads/VN442021.pdf

;