tamilnadu

img

பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

சென்னை,அக்.2- 10 ஆவது “விமன் சேஞ்ச்மேகர்ஸ்” வேலை வாய்ப்பு முகாம் மற்றும் சங்கமம், சென்னையில் நடைபெற்றது.  இக்கியூ.இன் (Equiv.in) முன்முயற்சியில் நடைபெற்ற இம்முகாமில்  750க்கும் மேற்பட்ட அனுபவ மற்றவர்கள் முதல் 15 ஆண்டுகள் மேல் வேலை அனுபவமுள்ள பெண்கள் கலந்துகொண்டு தங்கள் துறைக்கான ஆலோசனை களை பெற்றனர்.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 1096 பேர் பதிவு செய்திருந்தனர்.  இதில் 71 பேர் வேலை அனுபவமற்றவர்கள், 709 பேர் மாற்று வேலைக்காக முயற்சி செய்பவர்கள் மற்றும் சுமார் 307 பேர் மீண்டும் வேலைக்காக முயற்சிப்பவர்கள் ஆவர். துறைகள் சார்ந்த பதிவு களில், 260 க்கும் மேற்ப ட்டோர் கணினி துறையிலும், 99 க்கும் மேற்பட்டோர் வங்கி மற்றும் காப்பீடு துறையிலும், 69 பேர் மென்பொருள் மேம்பாட்டில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். மாற்று திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற. `ஹிதேஷ். ஆர்., தனக்கு ஏற்பட்ட பெரு மூளை பாதிப்பு மற்றும் போராட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார். "ஆண், பெண் சமத்துவம்" குறித்து அன்கிதா மெஹ்ரா, கதை சொல்லும் அமர்வினை நடத்தினார்.