tamilnadu

img

இ-சேவை ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

சென்னை:
இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று ஐடி மற்றும் ஐடிஇஎஸ் எம்பிளாயீஸ் யூனியன் (யுஎன் ஐடிஇ) வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் இணைச் செயலாளர் ஆ.இளங்கோவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இசேவை மற்றும் ஆதார் மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் உள்ள இசேவை மையத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பிற பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு கேபிள் நிறுவனம் தகுந்த பாதுகாப்பு வசதிகளையும் செய்ய வேண்டும்.இசேவை மற்றும் ஆதார் மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கவச உடை (பிபிஇ கிட்) வழங்க வேண்டும், போதிய அளவு மாஸ்க், சானிடைசர், 

கிளவுஸ் தர வேண்டும், ஊழியர்களுக்கு பிடித்தம் இல்லாமல் முழு சம்பளம் வழங்குவதோடு, பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பணிக்கு செல்ல பயணப் படி வழங்க வேண்டும், ஊரடங்கு காலத்தில் மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;