tamilnadu

ஓய்வூதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்

சென்னை, ஏப். 7-

வங்கி ஓய்வூதியதாரர் கள் அகில இந்திய கூட்டமைப்பின் (ஏஐபிபீஏஆர்சி) 3வது மாநாடு சென்னையில் மார்ச் 30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி. ஹரிபரந்தாமன் மாநாட்டை தொடங்கிவைத்துப்பேசி னார். கூட்டமைப்பின் தலைவர் கே.வி.ஆச்சார்யா முன் னிலை வகித்தார். பொதுச் செயலாளர் சுப்ரிதா சர்க் கார் தலைமை வகித்தார்.ஓய்வூதியத்தை திருத்தியமைத்து மேம்படுத்தவேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி மாற்றியமைக்க வேண்டும், 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கு 100 விழுக்காடு அகவிலைப்படியை அடிப் படை ஓய்வூதியத்துடன் இணைக்கவேண்டும்,பாரத ஸ்டேட் வங்கியில்ஓய்வுபெற்ற அனைவருக் கும் கடைசியாக வாங்கியசம்பளத்தில் 50 விழுக் காட்டை ஓய்வூதியமாக வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வங்கிப்பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை வரையறுக்கவேண் டும் (அதாவது பழைய பென் ஷன் திட்டத்தையே தொடர் வது), பென்ஷனுக்குத்தகுதி பெற்ற ஆண்டுகள் சேவைசெய்த- ராஜிநாமா செய்த-ஊழியர்களுக்கும் பென் ஷன் வழங்க வேண்டும்.ஓய்வுபெற்றோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பிரிமியம் தொகையைச் செலுத்துவதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உள் ளதைப்போன்றே முழுவதுமாக திரும்ப வழங்க வேண் டும், பணிக்கொடை-ஓய்வூதியம் கணக்கிடுவதில் சிறப்பு அலவன்ஸ் தொகையையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும், இருதரப்பு ஒப் பந்தப் பேச்சு வார்த்தையின் போது ஓய்வூதியதாரர் அமைப்புகள் பங்கேற்கவும் வழிவகை செய்யவேண் டும்,1.1.2016 ஆம் ஆண்டு முதல் பணிக்கொடை வரம்பை ரூ.20 லட்சம் வரை உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

;