tamilnadu

பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்

சென்னை, அக். 10 - மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி வியாழனன்று (அக்.10) தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் 10ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பல  ஆண்டுகளாக ஒப்பந்த ஊழி யர்களாக பணியாற்றி வரு கின்றனர்.  ஒப்பந்த ஊழியர்களை கணக்கெடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) தொடர் போராட்டங் களை நடத்தி வருகிறது. இந்நிலை யில் 2016ம் ஆண்டு ஒப்பந்த ஊழி யர்களை பணிநிரந்தரம் செய்ய வாரியம் ஒப்புக் கொண்டது. அத னை செயல்படுத்தாமல் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே தினக்கூலி வழங்க வேண்டும்; மின் தொடரமைப்புக் கழகங்களில் கே-2 ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 9 மண்டல அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒப்பந்த தொழிலாளிக்கும் போனஸ் வேண்டும்

மின்ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை வடக்கு, தெற்கு மண்ட லங்கள் சார்பில் சென்னை அண்ணா  சாலையில் உள்ள மின்வாரிய தலை மையகம் முன்பு மறியல் நடை பெற்றது.  இப்போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை, ஹெல்பர் காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். நிரந்தர தொழிலாளர் களுக்கு இணையாக ஒப்பந்த தொழி லாளிக்கும் போனஸ் வழங்க வேண்டும். மின் இணைப்பு கட்டண  உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஒன்றுபட்ட போராட்டம்

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிப் பேசிய மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன், “மின்வா ரியத்தில் நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த  தொழிலாளர்கள் பணியாற்று கின்றனர். ஒப்பந்த தொழிலாளர் களின் பணியானது ஹெல்பர் பத விக்கு இணையானது. அனல் மின்சார நிலையங்களில் முழுக்க முழுக்க ஒப்பந்த தொழிலாளர் கள் தான் பணியாற்றுகின்றனர். தடை செய்யப்பட்ட பணிகளில் சட்டத்தை மீறி ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களை ஒப்பந்த தொழிலாளி யாக அங்கீகரிக்க மறுக்கும் வாரியம்,விபத்தில் இறந்தால் ஒப்பந்த தொழிலாளி என்று ஒப்புக் கொள்கிறது” என்று வேதனை தெரிவித்தார்.

கொல்லைப்புற வழியாக நியமனம் செய்வதா?

“கஜா புயல் பணிகள் முடிந்ததும் ஒப்பந்த தொழிலாளர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மின்துறை அமைச்சர் அறி வித்தார். அதற்கு மாறாக, கேங்மேன் என்ற ஒரு பணியிடத்தை உருவாக்கி கொல்லைப்புற வழியாக 5 ஆயிரம் பேரை நிரப்ப உள்ளனர். அதனைக் கைவிட வேண்டும்” என்று வலியுறுத்திய எஸ்.ராஜேந்திரன், “22.2.2018 மத்திய அமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஒப்பந்த தொழிலாளியை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க வேண்டும்” என்றும் கூறினார்.

“வாரியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 43 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே, ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனை நிறைவேற்ற தவ றும் பட்சத்தில் நிரந்தர தொழிலாளியும், ஒப்பந்த தொழிலாளியும் இணைந்து போராடும் சூழல் உருவாகும்” என்றும் ராஜேந்திரன் எச்சரித்தார். இந்தப்போராட்டத்தில் மத்திய அமைப்பின் மாநிலப் பொருளாளர் வெங்கடேசன், மாநிலச் செயலாளர் எம்.தயாளன், மண்டலச் செயலாளர்கள் ஆர்.ரவிக்குமார் (வடக்கு), ஏ.முருகானந்தம் (தெற்கு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கரும், வேலூரில் கோவிந்தராஜு, திருச்சியில் அகஸ்டின், ரங்கராஜ், மதுரையில் உமாநாத், குருவேலு, கோவையில் மதுசூதனன், ஈரோட்டில் ஜோதிமணி, நெல்லையில் பீர் முகமதுஷா, செல்லமுத்து, காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
 

;