tamilnadu

img

மின்வாரிய ஊழியர்கள்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜூலை 23- மின்வாரிய பணியாளர் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு காஞ்சிபுரம் மின் திட்ட கிளை சார்பில் காஞ்சிபுரம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஊதியக்குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் வகையில் ஓய்வூதிய திட்ட சட்ட திருத்தங்களை கைவிட  வேண்டும். கடந்த 01.04.2003-க்கு பின் பணியில் சேர்தவர்க ளுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத் தலைவர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன்  கோரிக்கைகளை விளக்கி பேசினார். காஞ்சிபுரம் மின் திட்டக் கிளைச் செயலாளர் ஜி.படவேட்டான், பொருளாளர்  பி.கேசவன், துணைத் தலைவர் ஆர்.பாபு, ஓய்வு பெற்றோர்  அமைப்பு நிர்வாகிகள் ஸ்ரீதர்,  ஞானமுத்து, சி.ஜெயபாரதி ஆகியோர் பேசினர். கே.சங்கர் நன்றி கூறினார்.