tamilnadu

img

பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்.... அமைச்சர் நாசர் அறிவிப்பு....

சென்னை:
மாதவரம் பால் பண்ணையில் பால் கையாளும் திறன் அதிகரிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று(ஆக.28) பால்வளத்துறை மானியத்தின் கொள்கை விளக்ககுறிப்பை தாக்கல் செய்தார்.அப்போது,“தீவிர சந்தைப்படுத்துதல் முயற்சிகளின் விளைவாக ஐஸ்கிரீம் விற்பனை நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டரில் இருந்து10 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கை அடைந்துள்ளது” என்றார். கால்நடை தீவனத்தை அதிகரிக்கும் வகையில் புதிதாக நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய கால்நடை தீவன ஆலை விருது நகரில் விரைவில் நிறுவப்படும் என்றும்பால் விற்பனை விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததால் ஆவின் விற்பனை நாளொன்றுக்கு சராசரியாக1.74 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

1962 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் கையாளும் திறன்கொண்ட பால் பண்ணையாக நியூசிலாந்து அரசாங்க நிதி உதவியுடன் நிறுவப்பட்ட மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணை, ஆவின் குடும்பத்தில் முதன் முதலில் நிறுவப்பட்ட ஒரு பழமையான பால் பண்ணையாகும். கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதுநாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பாலைகையாளும் திறன் உடையதாக செயல்பாட்டில் உள்ளது. மேலும், வடசென்னை மக்களுக்கு தரமான பால் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சமீபத்திய ஆண்டுகளில் சிப்பங்கட்டுதல் மற்றும் குளிர்பதன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாதவரம் பால்பண்ணையில் 53 வாடகை பால் வழித்தட வாகனங்கள், 33 தனியார் முகவர் வாகனங்கள் மற்றும் 3 இணைபால் வழித்தட வாகனங்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் திட்டமான பால்பதப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ. 113.75 கோடி மூலம் மாதவரம் பால்பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதனை நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு திறனுக்கு விரிவாக்கம் செய்ய இயலும்.தீவிர சந்தைப்படுத்துதல் முயற்சிகளின்விளைவாக ஐஸ்கிரீம் விற்பனை நாள்ஒன்றுக்கு 6,000 லிட்டரில் இருந்து 10 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கை அடைந்துள்ளது.அம்பத்தூர் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவில் 146 வகைகளில் 82எண்ணிக்கையிலான பால் பொருட்கள்தயாரிக்கப்பட்டு, 36 ஒப்பந்த வாகனங்கள் மற்றும் 5 குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மூலம் சில்லறை விற்பனைக்குவிநியோகிக்கப்பட்டு வருகிறது.ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 3 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்மூலம் விநியோகிக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக இயக்குநர் குழுவின்பதவிக்காலம் ஏப்ரல் 2018ல் முடிவடைந்தது. தமிழ்நாடு மாநில கூட்டுறவுசங்கங்களின் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்டுள்ள பட்டியலின்படி தேர்தலை நடத்தி முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர்  அறிவித்தார்.

;