tamilnadu

img

சென்னையில் வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக ரூ.70 லட்சம் வரை செலவிடலாம். இதேபோல சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவிடலாம் என் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவை கண்காணிக்க 6 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வடசென்னை தொகுதியில் உள்ள திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சஞ்ஜீவ் குமார் தேவ் (செல்போன் எண்:94999-56202) நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிக்கு விவேகானந்த் பவுரியர் (செல்போன் எண்:94999-56203) நியமிக்கப்பட்டுள்ளார்.


தென்சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளை எம்.நவீன் (செல்போன் எண்:9499956205) நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிக்கு குருபிரசாத் (செல்போன் எண்:9499956206) நியமிக்கப்பட்டுள்ளார்.


மத்திய சென்னை தொகுதியில் உள்ள வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆர்.எம்.முஜும்தர் (செல்போன் எண்:94999-56209) நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு வி.என்.மங்கராஜு (செல்போன் எண்:94999-56208) நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர்கள் தேர்தல் முடியும் வரை சென்னையில் தங்கி இருந்து அனைத்து தேர்தல் பணிகளையும் கண்காணித்து வருவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

;