tamilnadu

img

மின்னணு கொள்முதல் இணையதளத்தை 75 சதவீத நிறுவனங்கள் பயன்படுத்தவில்லை

சென்னை, ஜூன் 30- தமிழ்நாட்டில் மின்னணு கொள்முதல் இணையதளம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும் 74 விழுக்காடு கொள்  முதல் நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தாமல் இருப்பதாக இந்திய தணிக்கை அலுவலர்  அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்திய தணிக்கைத்துறை ஒவ்வொரு மாநிலத்திலும் அர சுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து தணிக்கை செய்து அறிக் கையை சமர்ப்பித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022  ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி யுடன் முடிவடைந்த மின்னணு கொள்முதல் முறையில் அம லாக்கம் குறித்த அறிக்கையை  சட்டமன்ற கூட்டத் தொடரின்  இறுதி நாளான சனிக்கிழமை யன்று சமர்ப்பித்தது. இதில் கூறப்  பட்டிருப்பதாவது:- மாநிலத்தில் உள்ள அனை த்து நிறுவனங்களும் மின் கொள்  முதல் இணையதளத்தின் மூலம் மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க தமிழ் நாடு அரசு தவறிவிட்டது. திட்டம்  அமலுக்கு வந்து 15 ஆண்டுக ளான போதும் இந்த மென்பொரு ளின் செயல்பாடுகளை ஒருங்கி ணைக்கவும், கண்காணிக்கவும் பொறுப்பு மையம் இல்லை.

இதன் விளைவாக மின்  கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப் பட்டது. இது டெண்டர் செயல்  பாட்டில் வெளிப்படைத்தன்மை யை பாதித்தது. எனவே, அனை த்து கொள்முதல் நடவடிக்கை களுக்கும் மின் கொள்முதல் வலை தளத்தை பயன்படுத்த தமி ழக அரசு உத்தரவிட வேண்டும்.  இது தவிர தமிழ்நாடு ஒப்பந்தப் புள்ளிகள் வெளிப்படைத் தன்  மையுடன் கோருதல் சட்டத்தின்  விதிமுறைகள் காலவரம்பு குறித்த விவரங்களை இணைக் கும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்படவில்லை. மென்பொருளில் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு முன்  னுரிமை அளிப்பதற்கான எவ்  வித வசதியும் இல்லை. பல்வேறு  ஒப்பந்ததாரர்கள் ஒரே விலை யில் டெண்டர் கோரினால் அதை  கையாள்வதற்கான வசதிகள் வலைதளத்தில் இல்லை.

எனவே, பொதுமக்கள் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள தக வல்களை எளிதில் அணுகுவதற் கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல், டெண்டருக் கான ஆவணங்களை சமர்ப்  பிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்  குள் விடுபட்ட சான்றுகளை கோர வும் மின் கொள்முதல் வலை  தளத்தில் உள்ள வசதிகள் முறை யாக பயன்படுத்தப்படவில்லை. இதை சரி செய்து வலை தளத்தில்  சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள்  அடிப்படையில் மட்டுமே டெண்  டர்களை மதிப்பீடு செய்ய வேண்டும். மின் கொள்முதல் வலை  தளத்தில் உள்ள சிக்கல்களை களைவதற்கு ஒரு பொறுப்பு மையத்தை உருவாக்க வேண் டம். மேலும், கொள்முதல் செய்  யும் நிறுவனங்கள் தங்கள் அலு வலக கணினியில் டெண்டரை சமர்ப்பிக்க ஒப்பந்ததாரர்களை அனுமதிக்கக்கூடாது.

மதுபான கொள்முதல் தமிழ்நாடு அரசின் செயல் பாடுகள் தொடர்பாகவும் இந் திய தணிக்கை அறிக்கை தாக்  கல் செய்யப்பட்டது. இதில்,  தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மாநில  விற்பனை கழகம் (டாஸ்மாக்)  செயல்பாடுகளை ஆய்வு செய்த போது உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்  முதல் செய்வதில் வெளிப் படைத்தன்மை இல்லாதது கண்  டறியப்பட்டது. வெளிப்படைத் தன்மை இல்லாததால் ஒரு சில உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு கொள்  முதல் ஆணை குறைந்து அவர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு போக்குவரத்து ஏல ஆவ ணங்களை சோதனை செய்ததில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடந்தி ருப்பது தெரிய வந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;