ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
நிறுவனம்: ஒன்றிய நிலத்தடி நீர் வாரியம் (CGWB)
மொத்த காலியிடங்கள்: 23
பணி: Staff Car Driver
தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வானங்கள் ஓட்டுதலில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்கள் பழுது குறித்து தெறிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 19,900 - ரூ.63,200
வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: www.cgwb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Director, CGWB, NCR, Block-l, 4tn Floor, Paryawas Bhawan, Jail Road, Bhopal 462 Oll.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.03.2022
மேலும் விபரங்கள் அறியவும் www.cgwb.gov.in அல்லது http://cgwb.gov.in/Vacancies/Bhopal.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.