tamilnadu

சென்னையில் குழாய் மூலம் குடிநீர்: அமைச்சர்

 சென்னை, மே. 6 - சென்னையில் 1000 தெருக்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.3 டிஎம்சி  அளவு நீர் கையிருப்பு உள்ளது. மக்கள் ஒன்று கூடாமல் சமூக  இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில், ஏற்கனவே லாரி  மூலம் வாங்கி வந்த குடிநீர் 1000 தெருக்களில் குழாய் மூலம்  வழங்கப்படும். தற்போது 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்  னைக்கு வழங்ப்படுவதை 700 மில்லியன் லிட்டராக உயர்த்தி  விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.