tamilnadu

img

நிவாரணம் கோரி நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

செங்கல்பட்டு, ஜூன் 11- ஊரடங்கு கால நிவா ரணம் கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம், நாடக  கலைஞர்கள் மனு அளித்த னர். செங்கல்பட்டு, காஞ்சி புரம் மாவட்டத்தில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிரா மிய நாடக கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் திரு விழாக் காலங்களில் நடை பெறும் நாடகங்களை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கொரானா தொற்று பரவலை தடுக்க  பிறப்பிக்கப்பட்ட பொது ஊர டங்கால் திருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்ல. இதனால் நாடகக்கலைஞர்கள் வாழ்  வாதாரத்தை இழந்துள்ள னர். நாடக கலைஞர்க ளில் 500க்கும் குறைவான வர்களே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். பதிவு  செய்தவர்களுக்கு மட்டுமே  அரசு அறிவித்துள்ள நிவார ணம் கிடைத்திருப்பதாகவும், பதிவு செய்யாதவர்க ளுக்கும் நிவராணம் வழங்க வேண்டும் என்று நாடகக் கலைஞர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து சர்வ சக்தி  நாடக மன்றத்தினர், செங்  கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிசிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த  மனுவில், ஊரடங்கால் திரு விழாக்கள் நடைபெற வில்லை. வருமானமின்றி உண்ண உணவு இல்லாமல், பசியாலும் வறுமையாலும் வாடும் நாடக கலைஞர்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

;