tamilnadu

மக்கள் அச்சமடைய வேண்டாம்: அமைச்சர்

 சென்னை, ஜூலை 5- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு  நேரமில்லா நேரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின்  சட்டமன்றக்குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, “காரைக்குடி கல்லூரிக்கு அருகாமையில் மத்திய அரசு  ராட்சத எந்திரங்களை இறக்கியுள்ளதாகவும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களும் விவசாயிகளும் அச்ச மடைந்துள்ளதாகவும் இதுகுறித்து மாநில அரசுக்கு தெரியுமா? என்று கேட்டார். இதற்கு விளக்கம் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “தமிழக அரசின் நிலையில் எந்த  மாற்றமும் கிடையாது. விவசாயிகளை பாதிக்கும் எந்த  ஒரு திட்டமும் ஆய்வு செய்யவும், உற்பத்தி செய்யவும் இதுவரைக்கும் இசைவு கொடுக்கவில்லை. எப்போதும் கொடுக்கமாட்டோம். எனவே, தமிழக மக்களும், விவ சாயிகளும் அச்சமடையத்தேவையில்லை” என்றார். கடந்த 2008 ஆம் ஆண்டில் ஆய்வு பணிகளை  மேற்கொள்ள தமிழக அரசுக்கு 13 நிறுவனங்களிட மிருந்து விண்ணப்பங்கள் வந்தன. ஒன்றுக்குகூட அனுமதி  கொடுக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் ஆய்வு செய்தி  உற்பத்தியை துவங்க 19 நிறுவனங்கள் விண்ணப்பித்தி ருந்தன. ஆனால், மாநில அரசு ஒரு நிறுவனத்துக்கும் இசைவு மட்டுமல்ல அனுமதியும் கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் சண்முகம் கூறினார்.