tamilnadu

img

தேமுதிக தொடர் தோல்வி.... டெபாசிட்டை இழந்த பிரேமலதா....

விருத்தாசலம்:
தேமுதிக இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என சவால் விடுத்த தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம்தொகுதியில் டெபாசிட் இழந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகஅமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் டெபாசிட்டை இழந்தனர். அந்தவகையில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்துள்ளார்.  அதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளும் பேரம் பேசி கடைசியாக உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது.

விருத்தாசலத்தில் மொத்தம் 1,94,723 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. பதிவான ஓட்டுகளில், 6 ஒரு பங்கு ஓட்டு பெற்றால் டெபாசிட் பெற்றதாக அறிவிக்கப்படும். இதன்படி, பிரேமலதா 32 ஆயிரத்து 788 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் டெபாசிட்டை இழந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால், கட்சியை கலைக்கும் நிலைக்கு தேமுதிக சென்றுள்ளதாக கூறப்பட்டுகிறது.

;