tamilnadu

அமமுக பொதுச் செயலாளராக தினகரன் திடீர் நியமனம்

சென்னை,ஏப்.19- ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. பிறகு, அம்மா மக்கள் முன்னேற் றக் கழகம் (அமமுக) உதயமானது. அந்த அமைப்புக்கு பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்நிலையில், அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வெள்ளியன்று (ஏப்.19) சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றதாக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தபின்னர், அவர் அமமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அமமுகவை தனிக் கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார்.

;