சென்னை, மார்ச் 19- ஐசிஐசிஐ வங்கி, டிஜிட்டல் வங்கிச் சேவைக்கான தளத்தை ‘ஐசிஐசிஐ ஸ்டேக்’ எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கான அதிகாரம் – வங்கி கிளைகளுக்குச் செல்லாமல் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தவாறே தடையற்ற வங்கிச் சேவையைப் பெற வும், சில்லறை வியாபாரம் மற்றும் வணி கத்தைப் பெருக்கவும் இது வழி செய்கி றது. தற்போது அனைத்து வங்கிகள் தொடர் பான சேவைகளையும் இந்த டிஜிட்டல் தளத் தில் மேற்கொள்ளலாம். வங்கிக் கணக்கு திறப்பு, கடனுதவி, கட்டணம், முதலீடுகள் மற்றும் பாதுகாப்புத் தீர்வுகளைப் பெறலாம். இதன் மூலமாக முதல்முறையாக அறி முகப்படுத்தப்படும் பல அம்சங்களை மொபைல் போன் மற்றும் இணைய வங்கிச் சேவை மூலமாக உடனடியாகப் பெறலாம் என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் அனூப் பக்ஷி ஒரு செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.