tamilnadu

காற்றழுத்தத் தாழ்வு நிலை: இரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
வடகிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதன் எதிரொலியாக, அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை பெருநகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும். மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ  மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;