tamilnadu

img

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குக் காய்ச்சல்

சென்னை:
கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலும் மற்றொரு புறம் பரவி வருகிறது.தமிழகத்தில் இதுவரை ஏறத்தாழ 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காய்ச்சல், சளி அறிகுறி உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.அதன் விளைவாக டெங்கு பாதிப்பு பரவலாக உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனாவுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடியாமல் 2 பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் காய்ச்சலுடன் வரும் நோயாளியை முதலில் கொரோனா பரிசோதனைக்குபட்படுத்தி அதன் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிவதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன் டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. டெங்கு கொசுக்கள் பரவாத வண்ணம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

;