திருவண்ணாமலை, ஜூன் 24- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. போளூர் வட்டம் கீழ்ப்பட்டு கிராமத்தில் சூறாவளிக்காற்றால் அறுந்து விழுந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை, மாற்ற வேண்டும், கீழ்பட்டு, ராயங்குப்பம் மற்றும் கீழ்பட்டு - கஸ்தம்பாடி இணைப்பு சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும், சுகாதார மான குடிநீர் வழங்க வேண்டும், கிராம மக்கள் வசிக்கும் பகுதிகளில், காரிய மேடை அமைக்க வேண்டும், விவசாயி களுக்கு வறட்சி நிவாரணம், நெசவுத்தொழில் மற்றும் நெசவுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளைச் செயலாளர் இராசேந்திரன் தலைமை தாங்கினார், விவசாயிகள் சங்கச் செயலாளர் அ.உதயகுமார், மாற்றுதிறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.அ. செல்வம், சிபிஎம் வட்டச் செயலாளர் இரா. சிவாஜி உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். வசூர், அத்திமூர், கருங்காலிக்குப்பம் பகுதிகளிலும் (ஜூன் 25) அடிப்படை பிரச்சனை களை தீர்க்கக் கோரி ஆர்பாட்டம் நடை பெறுகிறது.