கிருஷ்ணகிரி, செப். 1- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைசார்ந்த. வறட்சிப் பகுதியான அஞ்செட்டி வட்டம் தேன்கனிக் கோட்டை வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில் இது வரை வட்டத்தில் சில அரசு அலுவலகங்கள் கட்டப் பட்டதை தவிர சிறுமுன்னேற்றம் கூட இல்லை. போதிய பேருந்து வசதிகள் இல்லாததாலும், பேருந்து நிலையம் கட்டப்படாததாலும். பல மணி நேரம் கடும் வெயில், மழையில் ரோட்டிலேயே மக்கள் நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. பூஞ்சோலை, ஆண்டியூர், ஏழுமனை தொட்டி, வண்ணாத்திபட்டி, சித்தாண்டபுரம், முனியன் நகர் பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் 7 நாட்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் விடுவதால் கிராமங்களில் கடும் குடி நீர் தட்டுப்பாடு உள்ளது .
காமராஜபுரத்தில் இருந்த குடி நீர் அடிபம்பையும் ஊராட்சி நிர்வாகமே கழற்றி விற்று விட்டனர். குடிநீர் இல்லாமல் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். கொடுந்தொற்றான இக்காலத் தில் கூட கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துவதில்லை. இதனால் கொரோனா தொற்றும், பல நோய்களும் பரவ வாய்ப்பாக உள்ளது. எனவே வட்ட நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவும், காவேரி ஆறு அருகிலேயே இருந்தும், இதுவரை செயல்படுத்தப்படாத கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கக்கோரியும், காமராஜ புரத்தில் குடிநீர் விநியோகிப்பதுடன் கழற்றப்பட்ட கை பம்பை பொருத்தி அதை உபயோகப்படுத்த ஆவன செய்ய வேண்டும், என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வட்டக்குழு சார்பில் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் காவேரி தலைமை தாங்கினார். வாலிபர் சங்க செயலாளர் குமாரவடிவேல், மாவட்ட செயலாளர் சுரேஷ், நிர்வாகி நாகராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிர காஷ் நிர்வாகிகள் தேவராஜ், மாரப்பா, கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.