கடலூர், ஆக. 21- விருத்தாசலம் வட்டத்தில் கனிம வளங்க ளைக் கொள்ளை அடிப்பதை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலடி பகுதியில் வட்டக் குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடியப்பட்டு, பாலக்கொல்லை, புலியூர், இருளக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் கூழாங்கல், செம்மண் ஆகியவற்றை வெட்டி கடத்தும் கும்பல்களுக்கு துணை போகும் சுரங்கத் துறை, வருவாய்த்துறை, காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்தி மக்களின் வாழ்வாதாரமான குடிநீரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதில் கிளைச் செயலாளர்கள் கணே சன், வேலன், முரளி, வீரன், மதியழகன், உதய குமார், வட்டச் செயலாளர் அசோகன், கலைச் செல்வன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் நெல் சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.