tamilnadu

வாக்கு சாவடிகளைப் பாதுகாப்போம்

தேர்தல் பரப்புரையில் பல்வேறு உத்திகளை கையாள்வது அரசியல் கட்சிகளின் வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் வன்முறையை பிரச்சார உத்தியாக பயன்படுத்தும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான். நேற்றைய முன் தினம் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பின்வருமாறு பேசுகிறார்: “நம்ம சிங்க குட்டிகள் 100,200 பேர் எல்லா பூத் வாசலில் நிற்கவேண்டும். எதிர்க்கட்சி காரன். அவங்க கூட்டணி கட்சிக் காரன் (எல்லாம் ஒருமைதான்) எல்லாம் பயந்து போயிடுவானுக. நம்ம தைரியமா நின்னா நம்மள தாண்டிஎவனாவது ஓட்டு போட உள்ள போயிடமுடியுமா? கொஞ்ச நேரத்துக்கு நின்னுட்டோம்னா வாக்குச் சாவடி நம்ம பக்கம். அப்புறம் என்ன.”- எத்தனை அராஜகமான பேச்சு இது!கடந்த வாரம் அன்புமணியும் இதேபாணியில் பேசியுள்ளார். அராஜகத்தை மூலதனமாக்கி அரசியலில் பயணிப்பவர்கள் இவர்கள். சமூக நீதியை குழி தோண்டிப் புதைத்து அதன் மீது சவாரி செய்ய நினைப்பவர்கள் இவர்கள். தமிழ்நாட்டில் சாதியை வைத்து அணிதிரட்டல் செய்து மோதல்களை உருவாக்குவது, சாதிய ஆதிக்கத்தின் அடையாளமாகஅப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, தொடர் பதற்றத்தை உருவாக்கி அநாகரீக குறுகிய அரசியல் லாபம் தேடுவது என்பதெல்லாம் இந்த இரண்டு அய்யாக்களின் அசிங்க பாத சுவடுகள்:தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக அவர்கள் செய்த மூன்றாம் தர தரகு வேலைகள், கூட்டணிஅமைப்பதற்கான பேரங்கள் அனைத்தையும் நாடறியும்.தமது கட்சி இளைஞர்களுக்கு நல்லஅரசியலை கற்றுத் தராமல், வன்முறையை மட்டுமே கற்றுக் கொடுப்பது பெரும் வேதனை தான்… இவர்களின் வன்முறை அரசியலுக்கு ஏப்ரல் 18 அன்று தமிழகமக்கள் முடிவு எழுத தயாராகி விட்டார்கள்என்பதே உண்மை.


என்.சிவகுரு

;