tamilnadu

img

விடிய விடிய வாக்கு எண்ணிக்கை: காத்திருந்த ஆதரவாளர்கள்

சிதம்பரம், ஜன.3- கடலூர் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்க ளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி  2ஆம் தேதி தொடங்கி அடுத்த நாள் 3 ஆம் தேதி  வரைக்கும்  தொடர்ந்தது. இந்த மையத்திற்கு  வந்த வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதர வாளர்கள் வாக்கு எண்ணிக்கை மைய  வாசலில் விடிய விடிய காத்துகிடந்தனர். தேர்தல் முடிவுகளை அவ்வப்போது அறிந்து கொள்வதற்காக வெளியிடங்களுக்குச் சென்று சாப்பிட முடியாமல்.  வாக்கு எண்ணிக்கை மைய வாசலில் அமைக்கப்பட்டி ருந்த தற்காலிக கடைகளில் நள்ளிரவை கடந்தும் சாப்பிட்டனர்.   கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டு மன்னார்கோயில், குமராட்சி, கீரப்பாளை யம், மேல் புவனகிரி, பரங்கிப்பேட்டை, விரு தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் மொத்தம் 287 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் 110 பேரும் திமுக சார்பில் 82 பேரும், தேமுதிக சார்பில் 17 பேரும் பாஜக சார்பில் 2 பேர், காங்கிரஸ் 2 பேர், சுயேச்சை 74 பேர் தேர்வு  செய்யப்பட்டனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 29 மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பி னர் பதவிக்கு அதிமுக சார்பில் 12 பேரும், திமுக சார்பில் 13 பேரும் தேமுதிக 1, சுயச்சை  3 என தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ,ருந்து வெளியே வரும்போது விடிய விடிய காத்திருந்த ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வெடி வெடித்து ஆரவாரம் செய்தனர். மாவட்டத்தின் பல இடங்களில் இரண்டாம் தேதி பகல் ஒரு மணிக்கு எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகள் விபரம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு, அதற்கான சான்றிதழ் கொடுக்கா மல் தாமதப்படுத்தி வந்தனர். இதனால் தேர்வு பெற்றவர்கள் பரங்கிப்பேட்டை, குமராட்சி ஒன்றியம் உள்ளிட்ட ஒவ்வொரு வாக்கு மையத்திலும் தேர்தல் அலுவலரிடம் பிரச்சனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் நள்ளிரவில் சாலை மறியலிலும் ஈடுபட்ட னர். இதனால் வாக்குச்சாவடி மையத்தி லிருந்து விடிய விடிய பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  சான்றிதழ் வழங்குவதில் தாமதம்  ஏற்படுவது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில் தேர்வு பெற்ற வேட்பாளர்களின் விபரம் குறித்து ஆன்லைன் மூலம் அப்டேட்  செய்கிறோம் அதனால் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

;