tamilnadu

img

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரித்துறை ஊழியர் தர்ணா போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன் தலைமையில் தர்ணா நடைபெற்றது. இதில்  மத்திய அரசு அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைவர் வைத்தியநாதன், நிர்வாகிகள் மீராபாய், ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;