திருத்தணி அருகே வீரகநல்லூர் இருளர் காலனியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துக்கொள்ள சென்றனர். இந் நிலையில் பிற்பகல் 2 மணிக்கு திடீரென்று அந்த மக்கள் வசித்து வரும் குடிசைகளில் தீப்பிடித்து எரிந்தன. அங்கிருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள்ளாக பாப்பம்மாள், அவினாசி ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசனமாது. இச்சம்பவம் குறித்து திருத்தணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.