tamilnadu

img

10 மாதத்திலேயே சேதமடைந்த பாலம்

செங்கல்பட்டு,ஜன.18- தரமற்ற முறையில் கட்டிய பாலம்  பத்து மாதத்தில் சேதமடைந்துள்ளது. பாலத்தை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  செங்கல்பட்டு மாவட்டம் கள்ள பிரான்புரம் ஊராட்சிக்குட்பட்ட அத்தி மானம் கிராமம். விவசாயம் நிறைந்த பகுதி இக்கிராமத்தில் வசிக்கும் விவ சாயிகள் அத்திமானத்திலிருந்து படா ளம் சர்க்கரை ஆலைக்குச் செல்ல வும், படாளம் ரயில் நிலையம் செல்வ தற்கும் விவசாய நிலங்களுக்கு இடையே  உள்ள சாலையைப் பயன்ப டுத்திவருகின்றனர். இந்த சாலையின் இடையில் புக்கத்துறையிலிருந்து கிளியாறு வரை செல்லும் மடுவு ஒன்று குறுக்கிடு கின்றது. இந்த மடுவைக் கடக்கப் பாலம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் எனக் கிராம மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் 2017-18 ஆம்  ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து  ரூ.25 லட்சத்து 42 ஆயிரத்தில் சிறு பாலம் ஒன்றை கட்டுவதற்கு மாவட்ட  நிர்வாகம் நிதி ஒதுக்கியது. இந்த நிதி யிலிருந்து கடந்த பத்து மாதங்க ளுக்கு முன்புதான் சிறு பாலம் கட்டப்பட்டது.

தரமற்ற முறையில் பாலம் கட்டப்  பட்டுள்ளதால் பத்து மாதத்திலேயே பழுதடைந்துள்ளது. பாலம் விரிசல்  விட்டுள்ளது. பாலத்தின் இரு பக்கங்க ளிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு  கட்டைகள் உடைந்தும்  உள்ளது. எம்சாண்டுக்கு பதிலாக மடுவில் உள்ள மண்ணை எடுத்துக்  குறை வான சிமெண்ட் வைத்துக் கட்டிய தால் பாலத்தின் தடுப்பு கட்டைகள் கையால் சுரண்டினாலே உடைந்து விழும் நிலையல் உள்ளது. தரமற்ற முறையில் கட்டிய பாலத்தை உடனடி யாக மாவட்ட நிர்வாகம் சரி செய்து  தரவேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்து அத்திமானம் கிராமத்தைச் சார்ந்த சுப்பிரமணியிடம் கேட்டபோது,“ இந்த  பாலத்தை அவசரகோலத்தில் ஒரு மாதத்தில்  கட்டிமுடித்துவிட்டனர். 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட வேண்டிய  பாலத்திற்கு ரூபாய் 10 லட்சம் கூட  செலவு செய்திருப்பதாகத் தெரிய வில்லை” என்றார். இந்த சாலையை விவசாயிகள் படாளம் சர்க்கரை ஆலைக்கு செல்ல வும் விவசாய நிலங்களுக்குச் செல்ல வும் பயன்படுத்தி வருகின்றோம். பாலம் தரமற்ற முறையில் கட்டப் பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் புகார் தெரி வித்தால் ஒப்பந்ததாரர் அனைவரை யும் கவனித்து விட்டுத்தான் பாலம்  கட்டப்பட்டது. உங்கள் வேலையைப் பாருங்கள் என மிரட்டுகிறார்கள்” என்றும் கூறினார். பத்து மாதத்திலேயே பாலம் விரிசல் விட்டுவிட்டது. தடுப்பு கட்டை கள் உடைந்து விழுகின்றன உடனடி யாக பாலத்தை மாவட்ட நிர்வாகம்  ஆய்வு செய்து தரமான பாலத்தைக்  கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறு பாலத்தை கட்டிய ஒப்பந்த தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு அளித்துள்ள உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

;