tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சி முறை இல்லை: தலித் இளைஞர்கள் புகார்

விழுப்புரம், டிச. 23- தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள நிலையில்  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவி கிராம ஊராட்சியை சேர்ந்த ஆதிதிராவி டர் இன இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தொரவி கிராம ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு உள்ள தலித் பகுதியில் சுமார் 900 குடும்பங்களில் 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் சுமார் 1,450 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஊராட்சி யில் உள்ள ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக பொதுப் பிரிவில் உள்ளது. அதேபோன்று  கிராம ஊராட்சித் தலைவர் பதவியும் உள்ளது. இந்த ஊராட்சியில் மற்ற பிரிவினர் வாக்குகள் ஆதிதிராவி டர் மக்கள் வாக்குகளை விட அதிகளவு இருப்பதனால், அந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர் இன மக்கள் போட்டி யிட்டும் வெற்றி பெற்று பதவிக்கு வரமுடியாத சூழ்நிலை.  எனவே மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்குள் தொரவி கிராம ஊராட்சியில் இதுவரை சுழற்சி முறையில் மாற்றப்படாமல் உள்ள ஒன்றியக்  குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவி களை தலித் பகுதி ஆதிதிராவிடர் இன மக்கள் மட்டுமே போட்டி யிடும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;