காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காவிமயம்: சிபிஎம் கடும் கண்டனம்
காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மதவாத நட வடிக்கைகளுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி), அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகி, ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாறி வரு வது கவலை அளிக்கிறது. 2008ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் உயர்தர தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.தற்போது என்ஐடி காரைக்கால், சங் பரிவாரங்க ளின் கட்டுப்பாட்டில் சென்று கொண்டி ருப்பது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கங்க ரேகர் இயக்குநராக பொறுப்பேற்ற பின் இந்நிறுவனம் காவிமயமாகி இருக்கிறது. இவர் சங்பரி வாரங்க ளின் தலைநகரமான நாக்பூர் அதிகார மையத்திற்கு வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணி யிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளில் இட ஒதுக்கீட்டு விதிமுறைகள் வெளிப்படையாக மீறப்படுகின்றன. ‘சுழற்சி முறை விளம்பரம்’ என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவரின் பிரதி நிதித்துவம் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகிறது. சமீபத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தின் படி ஆசிரியர் பணி யிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட படிவங்கள் வந்தன. ஆனால் இயற்பியல் மற்றும் மின்ன ணுவியல் துறைகளில் குறிப்பிட்ட இருவருக்கு மட்டும் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி யளிக்கிறது. இவர்கள் ‘சிந்தனை இந்தியா’ என்ற சங் பரிவார மாணவர் அமைப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றியதே இந்த பதவி உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்து சூடன் ரமேஷ் என்ற ஆய்வு மாணவர், ‘சிந்தனை இந்தியா’ அமைப்பின் ஒருங்கி ணைப்பாளராகவும், பாஜக மாணவர் பிரிவு ஏபிவிபி தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வரு கிறார். இவர் மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவது கண்டிக்கத்தக்கது. இதோடு மட்டுமல்லாமல், “ஸ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலய கைங்கர்ய சபா டிரஸ்ட்” என்ற பெயரில் கோவில் கட்டுவதற்காக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடம் கட்டாய வசூல் நடைபெற்று வருகிறது. ஒன்றிய கல்வித்துறை இணைய மைச்சர் வருகையின்போது இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்நிறுவனம், மத வாத நடவடிக்கைகளிலும், மூட நம்பிக்கைகளைப் போதிப்பதிலும், கோவில் கட்டுவதிலும் ஈடுபடுவது அதன் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது. இது மாணவர்களிடையே நல்லிணக்கத்திற்கு தீங்கு விளை விக்கும். எனவே, காரைக்கால் என்ஐடி நிர்வாகம் இதுபோன்ற பிற்போக்குத்தனமான நடவடிக்கை களை உடனடியாக கைவிட்டு, தொழில்நுட்பக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்துகிறது. புதுச்சேரி மாணவர்களுக்கு தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்கி, தேசத்தின் வளர்ச்சிக்கு இந்நிறு வனம் பங்காற்ற வேண்டும் என்பதே இடதுசாரிகளின் விருப்பமாகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான இத்தகைய நட வடிக்கைகள் தொடர்ந்தால், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிப்பதாக புதுச்சேரி மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.