tamilnadu

img

சிபிஎம் மாநிலக்குழு நாளை கூடுகிறது..... கே.பாலகிருஷ்ணன் தகவல்.....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 7)சென்னையில் நடைபெறு கிறது. அதில் தொகுதி பங்கீடு,தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட்கட்சி முதல் சுற்று பேச்சு நடத்தியது.நாங்கள் கூறிய தொகுதி எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கையை சொன்னார்கள்.அதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினோம். அதனை ஒப்புக் கொண்டார்கள். அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இன்றும்அழைப்பு வரவில்லை என்றார்.மக்கள் நீதி மையம் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், திமுகவுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.  மக்கள் நீதி மையத்துடன் பேச்சுவார்த்தை என்ற யோசனையே இல்லை. திமுகவுடனான பேச்சுவார்த்தையில் என்ன வருகிறது என்று பார்ப்போம் என்றார்.

மத்திய அரசின் விருப்பப்படி தேர்தல் ஆணையம்
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘தேர்தல்ஆணையம் முன்னறிவிப் பின்றி தேதியை அறிவித்தது. மேற்கு வங்கத்தில் 8 கட்ட தேர்தலை அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து அம்மாநில முதலமைச்சர் நீதிமன்றம் செல்வதாக அறிவித்துள்ளர். மாநிலஅரசை ஆலோசிக்காமல் மத்திய அரசின் விருப்பப்படி, அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தமிழகத்தில் வாக்குப் பதிவிற்கும் வாக்கு எண்ணிக்கை தேதிக்கும் அதிக இடைவெளி உள்ளது. தேர்தல் முடிவுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டி உள்ளது. மாறாக, தமிழக தேர்தலை ஏப்ரல்கடைசி வாரத்தில் நடத்தி, ஒருவார காலத்தில்முடிவை அறிவித்திருக்கலாம். சுயேட்சை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத் துறை, நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்க்கிறோம். நேர்மையான தேர்தலை நடத்த வலியுறுத்துகிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் தானடித்த மூப்பாக செயல்படுகிறது’’ என்றார்.

;