tamilnadu

img

அத்திவரதர் திருவிழா அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட சிபிஎம் கோரிக்கை

காஞ்சிபுரம், ஜூலை 19-  அத்திவரதர் திருவிழா விற்கு வந்து செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கூடுதலான அடிப்படை வசதிகளைச் செய்து தர  அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என சிபிஎம் காஞ்சிபுரம் பெரு நகரச் செயலாளர் சி.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- காஞ்சிபுரத்தில் நடை பெறும் அத்திவரதரைப் பார்க்க பல மாவட்டங்களி லிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, போன்ற மாநிலங்களிலிருந்தும்  பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.  இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  மேலும், கூட்ட நெரிசலை தடுக்க முடி யாமல்  இந்து அறநிலைய த்துறையும், மாவட்ட நிர்வாக மும் தவித்து வருகிறது. திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகம்  ஒதுக்கிய ரூ. 29 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை.  கடந்த  மாதம் 22ஆம் தேதி சிபிஎம் சார்பில் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைக்கப்ப ட்டது. இதில் சில கோரிக்கை கள் நிறைவேற்றப்பட்டு ள்ளன.   காஞ்சிபுரம் சுற்றுப் பகுதி களில் பல நம்ம டாய்லேட் கட்டி சிலகாலம் பயன்படுத்தி மூடப்பட்டுள்ளதை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும், கூடுதலாக ரங்கசாமி குளம், மற்றும் காலிமனையில் தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.  மேலும்மாவட்ட ஆட்சியர் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும்.  கூட்டம் அதிகமாக இருப்பதால் பி.எம்.எஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்  வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிபிஎம் சார்பில் அத்திவரதர் நிகழ்விற்கு வருபவர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

;