tamilnadu

img

சிபிஐ மூத்த தலைவர் ராஜ்மோகன்  மறைவுக்கு சிபிஎம் இரங்கல்...

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவர்ராஜ்மோகன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜ்மோகன் மறைவுமிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிற்சங்க இயக்கம், உலக சமாதான இயக்கம், ஜனசக்தி ஆகியவற்றில் செவ்வனே செயல்பட்டவர். அனைத்து தோழர்களிடமும் மிகவும் எளிமையாகவும், அன்பாகவும் பழகும் குணம் கொண்டவர். அவரது இழப்பால் துயருற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக் கும், குடும்பத்தினருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;