tamilnadu

img

விழுப்புரம் நகரத்தில் சிபிஎம் பிரச்சாரம்

விழுப்புரம், ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமா ருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு விழுப்புரம் நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. என்.மேகநாதன் தலைமை தாங்கினார்.கீழ்பெருபாக்கம், பழைய பேருந்து நிலையம், பெரியார் நகர் உட்பட ஏழு இடங்களில் நடைபெற்ற பிரச்சக் கூட்டங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, வட்டச் செயலாளர் கண்ணப்பன், ஆர்.மூர்த்தி, கருணாநிதி, சம்பத், ஏ.பக்ரிசாமி,பாலு, சகாதேவன், வீரமணி, கலிவரதன், நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;