tamilnadu

img

வர்க்க முரண்பாட்டை தோலுரித்து காட்டும் கோவிட் 19 வைரஸ்

உலக பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையையும் கொரோனா தொற்று புரட்டி போட்டுள்ளது. ஒரு புறம் சோசலிச நாடுகள் மக்களை பாதுகாக்க, முதலாளித்து நாடுகள் தோல்வியடைந்து அம்பலப்பட்டு நிற்கின்றன. சீனாவும், வியட்நாமும் தங்கள் நாட்டில் தொற்றை கட்டுப்படுத்தி உள்ளன. சீன மருத்துவக்குழு இத்தாலிக்கும் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. தங்களை அழிக்க முயன்ற அமெரிக்காவிற்கு வியட்நாம் மருத்து உதவி செய்து வருகிறது. கியூபா மருத்துவக்குழு நாடு கடந்து மருத்துவ உதவிகளை செய்து வருகிறது. உலக நாடுகளே வியக்கும் வகையில் ஒரு கேரளத்தில், தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாநில மருத்துவக்குழுக்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டுமின்றி, துபாய்க்கும் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. ட்ரம்ப் பாணியில் மோடியும், மோடி வழியில் எடப்பாடியும் கொரோனாவை கையாள்வதில் தோற்று நிற்கின்றனர்.

முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதும், ஏழைகளை வஞ்சிப்பதுமாக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் உள்ளன. எனவே, மக்களை காக்க 1.    பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனைக்கு வரும் தொற்று நோயாளிகளை அலைக்கழிக்க கூடாது. மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் செய்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தி சிகிச்சை முறைகளை மேம்படுத்த வேண்டும்.  2.    முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் அரிசி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் ரூபாய் 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். மாதமாதம் இலவச உணவுப்பொருட்களை வழங்க வேண்டும். 3.    நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 4.    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நடத்துவதற்கு மாநில அரசு பொருளாதார உதவி அளிப்பதோடு, சந்தைப்படுத்தலுக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜூன் 5) அன்று தென்சென்னை மாவட்டத்தில் 4 மையங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக சமூக வலைதளங்களில் மக்கள் திரட்டுவோம். கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

;