tamilnadu

img

கோவிட் - 19 வைரஸ் தடுப்பு  நடவடிக்கையில் ஸ்பிக் நிறுவனம்

 சென்னை, ஏப். 18-
இந்தியாவின் முன்னோடி வேளாண் ஊட்டச்சத்து மற்றும் உர நிறுவனங்களில் ஒன்றான  ஸ்பிக் நிறுவனம், கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசு எடுத்து வரும்  தடுப்பு நடவடிக்கையில் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க இந்நிறுவனம் முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. துப்புரவு, ஊட்டச்சத்து மற்றும் நோய் தடுப்பு ஆகிய 3 துறைகளை மையமாகக் கொண்டு பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது கைகழுவ தேவையான சானிடைசர்கள் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், அவற்றை போக்கும்விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஆகியோருக்கு தேவையான சானிடைசர் மற்றும் பாதுகாப்பு கருவிகளை ஸ்பிக் நிறுவனம் வழங்கி உள்ளது ஸ்பிக் தலைவர் அஸ்வின் முத்தையா தெரிவித்துள்ளார்.