tamilnadu

img

இயக்குநர் கௌதமனுக்கு கொரோனா பாதிப்பு...  

சென்னை 
கொரோனா தொற்றால் எளிய மக்கள் முதல் பிரபலமான நபர்கள் வரை அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக திரைத்துறையினர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், ராஜமெளலி உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். சில நட்சத்திரங்கள் கொரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமையில் உள்ளனர். 

இந்நிலையில் கனவே கலையதே, மகிழ்ச்சி உள்ளிட்ட படங்களை தயாரித்த இயக்குநர் கௌதமனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது குடும்பத்தினர் சிலருக்கும் அறிகுறி இருப்பதால் அனைவரும் வீட்டிற்குள் தனிமையில் உள்ளனர். இந்த தகவலை இயக்குநரும், நடிகருமான சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   

;