சென்னை, ஜூன் 6- தமிழகத்தில் தொடர்ந்து 8- ஆவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை 1,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக வும், சனிக்கிழமை 18 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1,516 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 18 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஞாயி றன்று 15,671 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
பேர் டிஸ்சார்ஜ் செய் யப்பட்டனர். இதன் மூலம் 16,395 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமி ழகத்தில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். 14,396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 வயதுவரை உள்ளவர்களில், 1,699 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ள வர்களில், 26,631 பேரும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 3,337 பேர் உள்ளனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா சோதனை நடைபெறுகிறது என்ற விவரத்தை சுகாதாரத்துறை தொட ர்ந்து மறுத்து வருகிறது. மற்ற மாவட்டங்க ளில் சோதனை நடைபெறுகிறதா? இல் லையா? என்பதை ஊடகங்கள், பத்திரிகை கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி யினர், மருத்துவ வல்லுநர்கள், பொதுமக் கள் அறிந்துகொள்ளவது தவறா? அறிந்து கொள்வது தவறு. அது பரம ரகசியம் என நினைக்கிறதா அரசு.