சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்தது.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றனர். அதேபோல் இந்த மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.105 உயர்ந்து, ரூ.2145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை தில்லியில் ரூ.105ஆகவும், கொல்கத்தாவில் ரூ.108ஆகவும் அதிகரித்துள்ளது. 5 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் ரூ.27ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.