tamilnadu

img

மே-5 சென்னையில் மாநாடு ஏ.எம்.விக்கிரமராஜா தகவல்

சென்னை, ஏப். 23- மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றிட போராடும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 36ஆவது மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது” என்றார்.தமிழகம் தழுவிய வணிக சங்கங்கள், தொழில் வணிகச் சங்கங்கள், ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் என அனைத்து தொழில் வணிகக் குடும்பங்களையும், ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் அகில இந்திய வணிக எழுச்சி மாநாடாக நடத்த, அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.கடந்த மாநாட்டில் பங்கேற்ற ஆளுங்கட்சி தலைவர்களும், எதிர் கட்சித் தலைவர் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எங்களின் தீர்மானங் களை நிறைவேற்றித்தர உறுதுணையாய் இருப்போம் என உறுதியளித்துச் சென்றார்கள். குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஜி.எஸ்.டி வரி குறைப்பு, மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் வரிகுறைப்பு என ஒருசில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும், பெரும்பாலான கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என கூறினார்.ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணிக்கு வணிகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கி, இரவு 7 மணி வரை தொடர்ந்து மாநாடு நடைபெறும். மாநாட்டில் லட்சக் கணக்கான வணிகர்கள் பங்கேற்கிறார்கள். இம் மாநாட்டில் நீதிபதி பி.ஜோதிமணி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தொழில திபர் ஜே.எம். ஹாரூண் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

;