சென்னை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச்செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ளஇரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர் தோழர் கே.சி.கருணாகரன் மறைவுக்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியினுடைய மாநில ஒருங்கிணைப்பாளராக திறம்பட பணியாற்றியவர். தனது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாலும், இடதுசாரி சிந்தனையாலும், சிறந்த பேச்சாளராக இளைஞர்களை அமைப்புக்கு திரட்டுவதில் அளப்பரிய பணியை மேற்கொண்டார். 50 ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் தமிழக நலன்களுக்காக எண்ணற்ற பொறுப்புகளை ஏற்று துடிப்புடன் செயலாற்றியவர்.