tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மை மக்களை மிகவும் நேசித்தவர் தோழர் தே.இலட்சுமணன்.... மாற்றுத்திறனாளிகள் சங்கம் - சிறுபான்மை நலக்குழு புகழஞ்சலி

சென்னை:
மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் சிறுபான்மை நலக்குழு அமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் தே.இலட்சுமணன் மறைவுக்கு பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பை உருவாக்குவதில் தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து மாவட்ட அமைப்புகளை உருவாக்கிய பெருமை தோழர் தே.இலட்சுமணன் அவர்களுக்கே உண்டு.இளைஞனைப் போல் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பில் செயல்வீரராக செயல்பட்டவர். சமூகத்தால்வெறுத்து ஒதுக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளை தனது கூட்டாளியாக, தனது சொந்தங்களாக மிகவும் அன்புடன் நேசித்தவர். சங்கத்தின் காலண்டிதழான ‘ஊனமுற்றோர் உரிமைக்குரல்’ மலர தொடர்ந்து முயற்சித்தவர்.தோழர் டி.எல். என்றென்றும் மாற்றுத்திறனாளிகளின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்,தோழர் தே.இலட்சுமணன் மறைவுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆழ்ந்த அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறது.

சிறுபான்மை மக்கள் நலக்குழு
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில தலைவர் எஸ்.நூர்முகமது,  மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை தலைவர் தே.இலட்சுமணன் அவர்கள் ஆகஸ்ட் 24 அன்று இரவு 8.30 மணியளவில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தோம். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினை உருவாக்கிய ஸ்தாபகத் தலைவர்களில் இலட்சுமணன் மிக முக்கியமானவர். சிறுபான்மை மக்கள் பிரச்சனைகளில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டவர். மதச்சார்பின்மையில் மிகவும் அழுத்தமான உறுதிகொண்டவர். சிறுபான்மை மக்கள் நலக்குழுவை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல மாவட்டங்கள் தோறும்அலைந்து திரிந்து பணியாற்றியவர். உரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் ஒற்றுமையை கட்டியமைக்கவும், சிறுபான்மை மக்களுக்கு உரிய நீதிகிடைக்க போராட்டங்களை உருவாக்க வும் தமது பெரும் உழைப்பை செலுத்தியவர். 

சிறுபான்மை நலக்குழு, மாற்றுத்திறனாளிகள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் உருவாக முன் முயற்சி எடுத்தவர். மார்க்சிய சித்தாந்த பார்வையோடு சமூகப் பிரச்சனைகளை அணுகியவர்.  தோழர்களை, ஊழியர்களை பயிற்றுவிப்பதில் தம்பொதுவாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டவர். அவரது இழப்பு தமிழகத்தின் தொழிலாளி வர்க்கத்திற்கும், மதச்சார்பின்மையை போற்று கிறவர்களுக்கும்  ஜனநாயக  உள்ளம் கொண்டோருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 

தமுஎகச இரங்கல்
தோழர் தே.இலட்சுமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள்சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவரும் கலை இலக்கியத் திறனாய்வாளருமான அன்புத்தோழர் தே. இலட்சுமணன் மறைவிற்கு தமுஎகச மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.அரசியல் வகுப்புகள் மூலம் வாசிக்கும் ருசியை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறியவர். தீவிர வாசிப்பாளர், பல்வேறு நூல்களையும் தத்துவார்த்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இளம் தோழர்களிடம் எளிமையாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு தமுஎகசவின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.

;