tamilnadu

img

தோழர் ஆதித்யவர்த்தனஸ்ரீ 29 ஆம் ஆண்டு நினைவு தினம்

கிருஷ்ணகிரி, ஜன.17- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் கெலமங்கலம் அருகில் உள்ள அணுசோனையில் தியாகி ஆதித்ய  வர்த்தனஸ்ரீயின் 29ஆம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர்  சங்கம் சார்பில் நடைபெற்றது. 29 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் சங்  கத்தின் இப்பகுதி தலைவராகவும் மார்க்  சிஸ்ட் கட்சி பகுதி கிளைச் செயலாளராகவும் செயல்பட்ட 22 வயது இளைஞர் அணு சோனையின் ஆதித்யவர்த்தனஸ்ரீ. இப்பகுதி யில் 1991 வரை கந்து வட்டிக்காரர்க ளின் பிடியில் சிக்கி மீண்டு வர முடியாமல் பல கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்த னர். அதே கந்து வட்டி கும்பளே சாராயம்  காய்ச்சி விற்பவர்களாகவும், தாதாக்களாக வும் சுற்றி வந்தனர். கூலியின் மிச்சம் மீதி யையும் கந்து வட்டிக்கும் சாராயத்திற்கும் என கொடுத்து விட்டு சாப்பாட்டிற்கும் வழியில்லாத நிலையில் மக்கள் தொடர்ந்து பரிதவித்து வந்தனர்.

இந்நிலையைக் கண்டு மக்கள், வாலி பர்களை மீட்டிட ஆதித்ய வர்த்தனஸ்ரீ மார்க்  சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்க கிளைகளை துவக்கி கந்து வட்டி, சாராய சாம்ராஜ்ய  தாதாக்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியதுடன், சமூக வீரோதிகளுக்கு ஆதர வாக செயல்பட்ட காவல் துறையினரையும் எதிர்த்து போராட்டங்களை துவக்கினார்.  கந்து வட்டி, சாராய சமூக விரோதிகள் 22 வயது இளைஞர் ஆதித்யவர்த்தனஸ்ரீயை வீடு புகுந்து வெட்டிக் கொன்றனர். காவல்  துறையோ தகவல் அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தது. தொடர்ந்து மார்க்சிஸ்ட், கட்சி சங்க வாலிபர் போராட் டங்களால் கந்து வட்டி, சாராய கும்பலின் சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட்டது.  தியாகி ஆதித்ய வர்த்தனஸ்ரீயின் நினை வஞ்சலி தொடர்ந்து ஒவ்வொருஆண்டும் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.  ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாநிலக்  குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், பிரகாஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், அனு  மப்பா, ஓசூர் வட்டச் செயலாளர் பிஜி.மூர்த்தி,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ்,  ஓசூர் வட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, தேன்  கனிக்கோட்டை வட்டத் தலைவர் சங்கர், கட்சி மற்றும்  வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தியாகி ஆதித்ய வர்த்த னஸ்ரீ வீட்டின் முன்பு நினவஞ்சலிக்  கூட்டம் நடைபெற்ற பின் அவர் வீரிய விதையாய் விதைக்கப்பட்ட இடம் வரை ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

;