tamilnadu

நிலக்கரி ஊழல்: விசாரணை நடத்த கோரிக்கை....

சென்னை:
நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கேட்டுக்கொண்டார்.

சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் கனிமவளத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் செவ்வாய்கிழமை பேசிய அவர், “திருவள் ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின்நிலைய ஆய்வு பணிக்கு சமீபத்தில் அமைச்சருடன் நானும் சென்றிருந்தேன். அப்போது, ஆவனத்தின் கணக்கில் சொல்லப்பட்ட அளவு கிடங்கில் இருக்கிறதா? என் பதை சோதனை செய்தபோது  இரண்டறை லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் 85 கோடியாகும்.தொடர்ந்து பேசிய அவர், தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து தரமானது என்றும் ஊழல் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் ரூ.38 கோடியில் ஒரு தடுப் பணை கட்டிக்கொண்டிருந்தபோது மழை பெய்தது. அந்தமழையில் அந்த தடுப்பணை காணாமல் போனது. அந்த ஒப்பந்ததாரிடம் பணம் வசூலிக்காமல் மீண்டும் ஒரு அந்த தடுப்பணைக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து பணியை செய்து வருகிறார்கள். இதுவும் எந்த நேரத்தில் அடித்து செல்லும் என்ற அச்சம் மக் கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

;