tamilnadu

img

தூய்மை பணியாளர்கள்: அரசாணை வெளியீடு

சென்னை:
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்கள் என்று அழைப்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்ட உத்தரவில், “கடந்த மார்ச் 19ம் தேதி, சட்டப் பேரவை யில், விதி எண். 110-இன் கீழ், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளி லும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களைக் கெளரவிக்கும் வகையிலும், அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளர்களும், இனி ‘தூய்மைப் பணியாளர்கள்’ என்று அழைக்கப்படு வார்கள் என்று முதல்வர் அறிவித்தார்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள் ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களைக் கவுரவப்படுத்தும் வகையில்  இனி ‘தூய்மைப் பணியாளர்கள்’என்று அழைக்கப்படுவார்கள் என அரசு ஆணையிடுகிறது.இதுகுறித்து உரிய திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக, கருத்துருவினை, உரிய விரைவு திருத்த அறிவிக்கையுடன் அரசுக்கு அனுப்புமாறு, முறையே நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுவதாக ஹர் மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.