tamilnadu

img

சிஐடியு போராட்டம் வெற்றி துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

செங்கல்பட்டு, ஜன.14- சிஐடியு சங்கத்தின் தலை யீட்டால், கல்பாக்கம் நகரியப் பகுதி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணு மின்நிலையம் மற்றும் நிலைய ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியை கல்பாக்கம் பொதுப் பணித்துறை நிறுவனம் பராமரித்து வருகின்றது. இந்நிறுவனத்தின் கீழ் 156 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்ற னர். இவர்களுக்கு  சட்டக்கூலியாக மாதம் ஒன்றுக்கு ரூ.373  வழங்க வேண்டும். ஆனால் ரூ. 310 மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில்  ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் என  கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி காண்ட்ராக்டர் ஒர்கர்ஸ்  மற்றும்  லேபர் யூனியன் (சிஐடியு) சார்பில்  வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அண்ணா துரை தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிர்வாகம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய நிலுவைத் தொகை ரூ. 25 லட்சத்து 48 ஆயிரத்து 647-ஐ கணக்கிட்டு, துப்புர வுத் தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊதிய நிலுவைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்பாக்கம் நகரியத்தில் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. மேலும் போனஸ் தொகை விரைவில் வழங்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் சிஐடியு நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்  ரூ.403 ஊதியம் உயர்த்தப்பட்டது. இதை தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில்  சிஐடியு சங்கத்தின் தலைவர் கே.பழனி சாமி, செயலாளர் க.பகத்சிங்தாஸ்,  துணைத் தலைவர் சி.செல்வக்குமார், சிபிஎம் புதுப்பட்டினம் கிளைச் செயலாளர் அமனுல்லா, கல்பாக்கம் பொதுப்பணி நிறுவனத்தின் திட்டப் பொறியாளர்கள் லஷ்மணசாமி, முருகன், நிர்வாக அதிகாரி பார்த்த சாரதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தந்த சிஐடியு தொழிற் சங்கத்திற்கு துப்புரவுத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

;