tamilnadu

img

தருமபுரி-கிருஷ்ணகிரியில் உரிமைகளை உயர்த்திப் பிடித்த சிஐடியு!

தமிழகத்தில் மேலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளா தாரத்தை பெருக்க பின்தங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொழிற் பேட்டை அமைக்க வேண்டும் என 1970-லேயே மார்க்சிஸ்ட் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் கோரிக்கைகள் வைத்தன. அன்றைய முதல்வர் கலைஞர் அறிவித்து, அடுத்த முதல்வரான எம்ஜிஆர் துவக்கி வைத்து ஓசூரில் சிப்காட் உருவானது. 1978 முதல் 88 ஆம் ஆண்டுக்குள் அசோக் லே லண்டு, டிவிஎஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் உட்பட பெரிய, சிறிய, குறுந் தொழில்கள் என கணக்கற்ற தொழிற் சாலைகள் உருவானது. சுமார் ஐம்பதாயி ரம் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். மிக மிக சிறிய ஊரான ஓசூர், 1980 க்கும் பின்பு உலகறிந்த தொழில் நகரமாக மாறியது. அடிமாட்டு விளையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், குறைந்த வட்டியில் வங்கிக் கடன், இலவச மின்சரம், தண்ணீர் வசதி, இவைகளுடன் தொழிற்சாலைகளுக்கு ஆதரவான அரசின் சட்டங்களும் போடப்பட்டது.

மறுபுறம், ஐந்து எட்டு ரூபாய் என மிகக் குறைந்த தினத் கூலி பாதுகாப்பற்ற, நிறந்தரமற்ற வேலை, போக்குவரத்து வசதிகள் இல்லாமல் வேலைக்கு 5 கிலோ மீட்டர் இரலில் நடந்தே போய் வரும் நிலை. கடும் குளிர், தொடர் மழை, தாங்க முடியாத கொசுத் தொல்லை, (கொசூர்) வாடகை வீடுகள் கூட இல்லாத நிலை இருந்தது. மீண்டும் 1985-க்கு பின் வந்த அசோக் லேலண்டு 2, 3, டிவிஎஸ் 2,3 என்றும் டைட்டன், இந்துஸ்தாதான் மோட்டார்ஸ் என கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்ததும், தொழிலாளர்களுக்கு கடும் நெறுக்கடி ஏற்பட்டு ஓசூர் தொழிலாளர்கள் கொதி நிலையில் இருந்தனர். இந்நிலையில் ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் சரியான தொழிற்சங்கத்தின் தேவை ஏற்பட்டது. சென்னையில் சிஐடியு தொழிற் சங்கத் தலைவர்களாய் இருந்த ஆர்.உமாநாத், வி.பி.சிந்தன், டி.கே. ரங்கராஜன் ஆகியோருடன் தலைவர்களுள் ஒருவராய் இருந்த தோழர் கே.எம்.ஹரிபட் தருமபுரி ஓசூர் அசோக் லேலண்டில் 1980-ல் தொழிலாளர்களால் தலைவராக ஏற்கப்பட்டு, சிஐடியு சங்கம் துவங்கப் பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டு களில் பல தொழிற்சாலைகளில் சிஐடியு சங்கம் துவங்கப் பட்டது. இதே வேலை யில் ஆலைகளில் நிர்வாகமே தன் ஆதரவு சங்கங்களை உருவாக்கியது.

ஓசூர் அசோக் லேலண்டு நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய மறுப்பு, குறைந்த சம்பளம், சலுகைகள் வழங்க மறுப்பு, கூட்டம் கூட்டமாய், வேலை நீக்கம், தற்காலிக வேலை நீக்கம், சம்பளவெட்டு, பொய் வழக்கு, காவல்துறையை ஏவிவிட்டு கைது, சிறைக் கொடுமை என கண்மூடித்தனமான அடக்குமுறைகளை ஏவியது. இதே நிலை சிப்காட் முழுவதும் நீடித்தது.  அன்றையதினம் காவல்துறைக்கு ஐ.ஜியாக இருந்த தேவராஜ் தருமபுரி மாவட்டத்தை நக்சலைட் பகுதியாக அறிவித்ததுடன் தொழிற் சங்கங்கள், கம்யூ னிஸ்ட் கட்சி, போராட்டங்களை ஒழிப்பேன் என கொக்கரித்தார். 1980 முதல் ஓசூர் சிப்காட்டில் போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக ஓசூர் மக்கள் கமிட்டி, ஊர் பெரிய மனிதர்கள், காவல் துறை, துணை போகும் கட்சிகள், நிர்வாகம் உருவாக்கிய தொழிற் சங்கங்கள், குண்டாஸ் மூலம் ஆலைகளுக்குள்ளும், வெளியிலும் அடக்கி ஒடுக்கியது. 

பல நிறுவனங்களிலும் சங்கம் உருவாக லேலண்டு சிஐடியு நிர்வாகிகளே முன் நின்றனர். இதை அறிந்த நிர்வாகம் போட்டி சங்கங்கள் துணையுடன் முக்கிய ஊழியர்கள் மீது அனைத்து வகையிலும் தாக்குதல் தொடுத்தது. இதன் தொடர்ச்சியாக 1983-ல் சிஐடியு நிர்வாகியும் முக்கிய ஊழியருமான தோழர் சக்திவேல் பணி முடித்து வீடு திரும்பும் போது கடுமையாக தாக்கப்பட்டு மரணமடைந்தார். இதற்கு நியாயம் கேட்ட சிஐடியு செய லாளர் சி.முத்து, துணைச் செயலாளர் அந்தோனி ஜார்ஜ், நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, பொன்.முத்தழகன், சந்திரபாபு, ரசாலம் ஆகிய ஆறு பேர் மீது 307,106,107, கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளில் பொய் வழக்குகுகள் போட்டு இரண்டு மாதம் சிறையில் அடைத்தது.  ஆலைக்குள்ளும் சிஐடியு சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டவர்கள் மீதும் எல்லா வகையிலும் நிர்வாகம் கடும் தாக்குதல் தொடுத்தது. தோழர் ஹரிபட் வழிகாட்டு தலில், அனைத்து தாக்குதல்களும் முறியடித்து சட்டப்படியும், போராட்டம் மூலமும் நிர்வாகத்தை பணிய வைத்து 86-ல் தொழிலாளர்கள் நிரந்தரம், சம்பள உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில் நிர்வாகம் ஏற்கனவே ஜோடித்த பொய் வழக்குகளில் இந்த 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கச் செய்ததது. அதை காரணமாக காட்டி 88 ஆகஸ்ட்டில் 6 பேரையும் உடனடியாக வேலை நீக்கம் செய்தது. சிஐடியு உச்ச நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், தொழிலாளர் துறை என அனைத்திலும் போராடியது. பழி வாங்கப்பட்டவர்கள் எந்த வேலைக்கும் செல்லாமலும், சுய தொழில் செய்ய விடாமலும் நிர்பந்தித்தது.  அந்த 6 பேருரின் குடும்ப செலவுக்கும்  வாழ்க்கை நடத்தவும் வழக்கிற்காகவும் தொழிற் சங்கமும், தொழிலாளர்களும் துணை நின்றனர். 1990-ல் அனைவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து வழக்கிலும் வெற்றி பெற்றனர். அதனடிப்படையில் நிர்வாகம் நிரபராதிகளை பொய் வழக்கு மூலம் வேலை நீக்கம் செய்தது தவறு என்றும் உடனடியாக 1988 முதல் சம்பளத்துடன் வேலை வழங்கவும் தீர்ப்பு பெற்றனர்.

தோழர் ஹரிபட் பேச்சுவார்த்தை முடிவில் 1993 டிசம்பரில் வெற்றி விழாவுடன் முழு சம்பளத்துடன் முழு சர்வீசுடன் வேலைக்கு சென்றனர். இந்த 6 தோழர்களும் 58 வயது வரை பணி புரிந்து ஓய்வு பெற்ற பின்னும் சங்க வேலை களில் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைவர் நஞ்சுண்டன், பொருளாளர் பீட்டர் கூறுகையில்,“ தருமபுரி, கிருஷ்ணகிரி தொழிற்சங்க வர லாற்றில் வாழ்நாள் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சங்கத்திற் காக, மக்கள் சேவைக்காக வாழ்ந்து மறைந்த தியாகி தோழர் கே.எம்.ஹரிபட் சங்கத்திற்காக பலியான தியாகி தோழர் சக்திவேல், மற்றும் 6 ஆண்டுகள் வேலை யிழந்து, 90 நாட்கள் ஓசூர், கிருஷ்ண கிரி, சேலம், வேலூர் சிறைகளில் இருந்தும் போராடி மீண்டும் அனைத்து உரிமைகளுட னும் வேலை கிடைக்கப்பெற்ற சி.முத்து, அந்தோனி ஜார்ஜ், நாராயணமூர்த்தி, சந்திரபாபு, பொன் முத்தழகன்,ரசாலம் ஆகியோரின் தியாகமும் வெற்றியும் 1979 க்குப் பிறகான தமிழக சிஐடியு தொழிற்சங்க வரலாற்றில் ஒரு மையில் கல்லாகவே குறிப்பிடப்படுகிறது” என்றனர்.

ஒய்.சந்திரன்

;