மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கும் முடிவை கண்டித்து சிஐடியு சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்திவீதி அமுதசுரபி எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். பிரதேச நிர்வாகிகள் சீனுவாசன், பிரபுராஜ், மது, ரவிக்குமார், கலியன் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக மத்திய பாஜக அரசை கண்டித்து தொழிலாளர்கள் முழக்கமிட்டனர்.