tamilnadu

img

கோவிட்-19 : சென்னை ராயபுரத்தில் 5364 பேர் பாதிப்பு

சென்னையில் உள்ள ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கைன் எண்ணிக்கை 5,364 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,843 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உள்ளது. தமிழகத்தில் 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 479 பேர் உயிரிழந்துள்ளனர். 25,344 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 382 பேர் உயிரிழந்துள்ளனர்; 17,275 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 72 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 4,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 52 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 3,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 27 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 4,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 55 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 40 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 2,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 62 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில் 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17 பேர் உயிரிழந்துள்ளனர். வளசரவாக்கத்தில் 1,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர்.